மோடி சொன்னதை செய்வாரா..?

1000rupeeபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணப் பரிமாற்ற அளவுகளை அதிகளவில் குறைத்து மக்களை டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றத்தைக் கொண்டு செல்ல முயற்சித்தது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு போதிய அளவிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை என்பதே காரணம். இந்நிலையில் மோடி கூறிய 50 நாட்கள் காலம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடியும் நிலையில், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணப் பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் புத்தாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 30

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் அவசர அவசரமாக நிறைவேற்றிய இந்த மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. அதன் காரணமாகவே அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகள், டிஜிட்டல் பொருளாதாரம் எனத் தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை அடுக்கி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் மக்களைப் பாடாய் படுத்தி வந்த வங்கி மற்றும் ஏடிஎம் கட்டுப்பாடுகள் டிசம்பர் 30 வரையில் மட்டுமே என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2017ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்..?

மக்களுக்கும், நாட்டின் வர்த்தகத்திற்கும் போதிய அளவிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியாத காரணத்தாலும், ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ஏற்பட்டுள்ள பல அச்சுப் பிழைகள் மூலம் பயன்படுத்த முடியாமல் வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் காரணத்தால் நாட்டிலும் பணப் புழக்கத்திலும் இயல்பு நிலை நிலவும் வரை பணப் பரிமாற்றத்துக்காகத் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் நிலைப்பாடு

மோடி கூறிய 50 நாட்கள் கால அவகாசம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் வங்கிகளிலும், வங்கி அதிகாரிகள் மத்தியிலும் இயல்பு நிலை திரும்பவில்லை காரணம் பணத் தட்டுப்பாடு. இதனால் மத்திய அரசு விதித்துள்ள வாரம் 24,000 ரூபாய் வரையிலான வித்டிரா, ஏடிஎம்களில் தினமும் 2000 ரூபாய் பணம் போன்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் 2017ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்ப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மோடி கூறியது உண்மை என்றால்..?

சரி மோடி கூறியது போல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் டிசம்பர் 30ஆம் தேதியுடன் நீக்கப்பட்டால் ஜனவரி 2ஆம் தேதி முதல் மக்கள் அதிகளவில் வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தை வித்டிரா செய்வார்கள் அதற்குத் தேவையான பணம் இன்னும் வங்கிகளில் வரவில்லை.

6 நாட்கள்

மத்திய அரசு மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது அவரச கால அடிப்படையில் இந்தியா முழுவதும் ராணுவ விமானத்தின் மூலம் புதிய ரூபாய் நோட்டுகளை டெலிவரி செய்தது. இப்படி அதிரடியான பணிகளைச் செய்தும் மத்திய அரசுக்கு வங்கிகளின் கருவூலத்திற்குக் கொண்டு செல்ல சுமார் 6 நாட்கள் தேவைப்பட்டது. இப்படி இருக்கும் போது எஞ்சியுள்ள 5 நாட்களில் எப்படி டெலிவரி செய்யும்.

தளர்வு

இத்தகைய இக்காட்டான சூழ்நிலையில் பணப் பரிமாற்றத்திற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் கண்டிப்பாகச் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்துள்ளது.

tamil.goodreturns.in

TAGS: