மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம்.. விழிப்புணர்வு பயணத்தில் மதுகுடிப்போர் சங்கம்!

drinkers-associations

சென்னை: மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தொடங்கியுள்ளனர்.

வர்தா புயல்

சென்னையை தாக்கிய வர்தா புயலால் ஏராளமான மரங்கள் சேதமடைந்தன. காற்றின் வேகத்தில் சிக்கிய பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இது போன்ற மரங்களை மீண்டும் வளர்க்க பல வருடங்கள் ஆகும். இந்நிலையில் மரம் நடும் விழிப்புணர்வு பிரசாரத்தில் மதுகுடிப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மனித குலத்தை காப்போம்

தமிழகத்தில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தற்போது மரங்கள் சாய்ந்தாலும்,மது குடிப்போர் சாய்ந்தாலும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்ற வாசகத்தோடு மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மரம் நடும் விழிப்புணர்வு பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம்

மரங்களை வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களத்தில் இறங்கியுள்ளது. இவர்கள் மரக்கன்றுகளை நடுவோம், மனித குளத்தை காப்போம் என்ற வாசகத்தோடு வீதி வீதியாக இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே மரங்களையும் நட்டி வருகின்றனர்.

“வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு”

மது அருந்துவது வீட்டுக்கும், நாட்டுக்கும், உடல்நலனுக்கும் கேடு என நாம் அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், சிலர் மதுபானம் அருந்தும் பழக்கத்தை விட முடியாமல் இருப்பார். இருப்பினும் அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நல்ல விஷயங்களையும் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர்.

tamil.oneindia.com

TAGS: