1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்பு 1அமெரிக்க டாலர்=1 … இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும். 2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள்.
அது மட்டுமா பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும், பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பு எரிக்க உதவியதும், அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும், திருநீர் செய்யபயன்படுத்தப்பட்டதும், சாணம், தயிர், கோமியம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞ்ச காவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப்ட்டது.
மேலும் கோமியம் பூச்சி,புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது. சரி இது அனைத்திற்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்… காலையில் பல்விலக்க பேஸ்ட், அடுப்பு எரிக்க (கேஸ் ) அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள், கிருமி நாசினி டெட்டால், விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள், உழவு செய்ய டிராக்டர்கள், அதற்காக பெட்ரோலிய பொருட்கள், விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது.
மேற்சொன்னபடி பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் உளவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம், நிலம் உழுதிட, விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல, மக்கள் வாகனப் பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும். இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்து பாருங்கள். நாட்டு மாடு வகைகளில் பல இனங்கள் இப்பொழுது இல்லை..