அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பொன்னையன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகப்படுவது தவறு. அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
அவர் உடல்நலக் குறைவு காரணமாக தான் உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நான் கண்காணித்துக் கொண்டு தான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுக்குழுவில் சசிகலா பங்கேற்பதில் பிரச்னை இல்லை என்றும், தலைமையேற்க நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும் சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை.
கட்சியின் அனைத்து அமைப்புகளும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய பொன்னையன், சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் எந்த பிரச்னையும் இல்லை. பொதுக்குழுவிற்கு சர்வ அதிகாரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-http://news.lankasri.com


























அப்படி போடு அருவாளே
அது
திட்டமிட்ட கொலை இல்லையென்றொல் உணரிச்சிவசப்பட்டு செய்த கொலையா?
அப்படி என்றால் அவளின் மருத்துவ குறிப்புகளை வெளியிடலாமே– ஆனாலும் எவனையும் நம்ப முடியாது. உடல் பரிசோதனையை சரி அதுவும் வெளிநாட்டு மருத்துவர்கள் தான் செய்ய வேண்டும். பணம் அங்கு பாதாளத்தை விட பாயும்.