‘டொனால்டு டிரம்ப்’இன் வெற்றியால் இந்தியாவிற்கு பாதிப்பு மட்டுமில்லை நன்மையும் உண்டு..!

donaldtrumpசென்னை: ஒரு வழியாக அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றிக்குப் பின் அமெரிக்காவில் பல இடங்களில் மாணவர்கள், மக்கள் போராட்டங்கள் நடத்தினர். காரணம் அமெரிக்காவில் பெரும்பாலான மக்களுக்கு டிரம்ப் வெற்றிபெற்றது பிடிக்கவில்லை. அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அமெரிக்கா-இந்தியா நட்புறவு மற்றும் வர்த்தகத் தளத்தில் மிகப்பெரிய பாதிப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் டிரம்ப் வெற்றியினால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகளும் நன்மைகளைப் பார்ப்போம்.

வர்த்தக ஒப்பந்தம்

யாரும் விரும்பாத டொனால்டு டிரம்ப்-இன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ‘America first’ முறை, இதுவரை அமெரிக்கா உலக நாடுகளுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது சீனா, இந்தியா, வியட்நாம், போன்ற வளரும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொச்-1பி விசா

டொனால்டு டிரம்ப் தனது பிரச்சாரக்கூட்டத்தில் பல முறை ஹொச்-1பி விசா அளிப்பது நாணயமற்றது எனப் பல முறை கூறியுள்ளார். இதனால் தற்போது டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதால் இனி வரும் ஆண்டுகளில் ஹொச்-1பி விசா அளிப்பது அதிகளவில் ஏன் 0% சதவீதமாகக் குறையலாம். இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், விபரோ போன்றவை பாதிக்கப்படும். காரணம் இந்தியாவில் அதிகளவில் ஹொச்-1பி விசா பயன்படுத்துவது ஐடி நிறுவனங்கள் தான். பிற துறைகளில் எண்ணிக்கை மிகவும் குறைவு.

வேலைவாய்ப்புகள்

இந்தியாவைப் பற்றி டொனால்டு டிரம்ப் எப்போது 2 மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார். ஒன்று இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது. இரண்டு அமெரிக்கா வெளிநாடுகளிடம் இழந்த வேலைவாய்ப்புகளைத் திரும்பக் கொண்டு வருவேன் என்பதும் தான். அமெரிக்காவும், அமெரிக்க நிறுவனங்களும் அதிகளவில் தங்களது பிராஜெக்ட் மற்றும் வேலைவாய்ப்புகளை இந்தியர்களிடமும், இந்திய மக்களிடமும் கொடுத்துள்ள உலகம் அறிந்த உண்மை. இவரின் மாறுபட்ட கருத்துக்களால் இந்திய வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய பதற்றம் நிலவி வருகிறது.

கார்பரேட் வரி

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியாக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி அளவை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் போர்டு, GM, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளது.

மேக் இன் இந்தியா

டொனால்டு டிரம்ப்-இன் அதிரடி அறிவிப்புகளால் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொனால்டு டிரம்ப்

சரி டொனால்டு டிரம்ப் வெற்றியாவில் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகளைப் பார்த்தோம், நன்மைகளை இப்போது பார்ப்போம்.

புதிய வாய்ப்புகள்

டொனால்டு டிரம்ப் தொடர்ந்து விசா அளிப்பது குறித்து இந்தியாவிற்கு எதிராகப் பல கருத்துக்களை வெளியிட்டாலும், தொடர்ந்து இந்தியா முதலீட்டாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிவப்புக் கம்ளம் வரவேற்பும் அளிக்காத குறையாக வாய்ப்புகள் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சீனாவிற்கு எதிரி

டிரம்ப் தனது முதல் பிரச்சாரக் கூட்டம் முதல் கடைசிக் கூட்டம் வரை சீனாவிற்கு அமெரிக்கா அதிகளவிலான வாய்ப்புகளை அளிப்பதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். இதன் மூலம் அமெரிக்க அதிபருக்குச் சீனா மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்றிய பின் சில மாதங்களில் அமெரிக்கா – சீனா மத்தியில் ஏற்படும் பிரிவினை இந்தியாவிற்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக வரி மற்றும் கட்டணங்கள் விதிப்பு..

சீனா, அமெரிக்காவின் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதிக வரி மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா-சீனா மத்தியில் இருக்கும் வர்த்தக ஒப்புந்தம் குறித்த டிரம்ப் வெளிப்படையாகத் தனது கருத்தைக் கூறினார்.

பாகிஸ்தான்

இந்தியாவிற்குப் பரம எதிரியாக இருக்கும் பாகிஸ்தான் நாட்டைக் குறித்து, தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் சிறந்த இருப்பிடமாக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் democratic கட்சி இதுவரை அமெரிக்காவிற்கு அளித்து வந்த நிதியுதவிகள் முழுமையாகத் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதம்

மேலும் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராத தொடர்ந்து போர் கொடி தூக்கிக் கொண்டு இருக்கிறாக், இதனால் இந்தியா அமெரிக்கா மத்தியிலான பாதுகாப்பு மேம்படும் என எதிரிபார்க்கப்படுகிறது.

மக்கள் கருத்து

நீங்களே சொல்லுங்கள் டொனால்டு டிரம்ப் வெற்றி இந்தியாவிற்குச் சாதகமா? பாதகமா?

tamil.goodreturns.in

TAGS: