ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் கட்சியினரிடையே ஏற்புரை நிகழ்த்திவிட்டு மேடையில் அவர் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் திடீரென சசிகலாவின் காலில் விழ முயற்சித்தனர்.
உடனே அவர்களை தடுத்து நிறுத்திய சசிகலா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த படி அலுவலகத்தில் இருந்து போயஸ் தோட்டம் புறப்பட்டார்.
-http://news.lankasri.com
இவனெல்லாம் தலைவர்கள்– நாதாரிகள். இவன்களின் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது–?
கழிசடை அரசியல்வாதிகள்
அம்மாவின் தவறுகளில் ஒன்று “கூன் விழுந்தவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்தது”