மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களை நக்கீரன் தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் அதே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற விடு முறைக்கால அமர்வு, மக்களுக்குள்ள சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான எஸ்.வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது.… “”உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தால் தான் உண்மை வெளியில் வருமா?”’என்று கேட்டது, ஆளுந் தரப்பிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டு, பற்கள் பிடுங்கப்பட்டதாக ஊடகங் களில் செய்திகள் வருவதால் சி.பி.ஐ. விசாரணை மூலம் உண்மை தெரிவிக்கப்பட வேண் டும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண் டும்” என தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் உடலைத் தோண்டி யெடுக்கின்ற நிலை மையை உருவாக் காமல் உண்மை விவரத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் -தலைமை நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடைபெறவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருக்கிறார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்திய நாதன், ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கி பாதுகாக்கிறது.
ஜெயலலிதா எப்படி இறந் தார்? என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக யார் வேண்டுமானாலும் சந்தேகப்பட லாம். அதுகுறித்து, அவர்கள் கேள்வியும் கேட்க லாம். அதற்கு, அவர்களுக்கு உரிமை உள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். எனக்கே, தனிப்பட்ட முறையில் அந்த சந்தேகங்கள் உள்ளன.
ஜெயலலிதா பூரணமாக குணமடைந்துவிட்டார். அவர் நடக்கிறார், …டி.வி. பார்க்கிறார்,… விரைவில் வீடு திரும்புவார் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது அப்பல்லோ நிர்வாகம்.
ஆனால், திடீரென்று அவர் இறந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் சிகிச்சை விவ ரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் இருப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞரே சொல்கிறார். அப்படியிருக்க, மத்திய அரசும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டுமல்லவா? ஏன் மௌனமாக இருந்தது?
இதற்கான, காரணம் மத்திய அரசுக்கு மட்டும்தான் தெரியும். ஜெயலலிதாவின் உறவினர்கள் மருத்துவமனையில் அவரைப் பார்க்க முயன்றபோதுகூட அனுமதிக்கவில்லை. அந்த உறவினர்களும் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகவில்லை.
இந்த வழக்கு பொதுநல வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி பெஞ்ச்தான் விசாரிக்கும். ஒருவேளை நான் விசாரித்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன்’ என்று கூறி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
ஜெயலலிதா சமாதிக்கு கட்சி நிர்வாகிகளால் அழைத்துவரப்படுவோரும், ஆர்வமாக வரும் தொண்டர்களும், தவறான சிகிச்சையால் இறந்தாரா- ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா- வேறு காரணங்கள் உண்டா என மரண சந்தேகங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகிவிட்டது. தற்போது, உடலை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டிய நிலை வந்தால், உண்மையை கண்டுபிடிக்கமுடியுமா என பிரபல தடயவியல்துறை பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரனிடம் நாம் கேட்டோம்.
ஸ்லோபாய்சனை பொறுத்தவரை எந்த காலத்திலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அவர் இறந்தபோது அவரது உடலில் எவ்வளவு பாய்சன் இருந்தது? என்பதை விஸ்ரா (உடல் உறுப்புகள்) ரிப்போர்ட்டின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
அதாவது, ஒருவர் சாகக்கூடிய அளவுக்கு டோஸ் (lethal dose) கொடுக்கப்பட்டிருந் தால் தெரிந்துவிடும். அதை விட, குறைவாக இருந்திருந் தால் அது ஸ்லோ பாய்ச னாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம்.
பொதுவாக, ஸ்லோ பாய்சன் கொடுப்பவர்கள் சாப்பாட்டில் கொடுக்க மாட்டார்கள். அதில், கொஞ்ச நேரத்தில் ருசி தெரிந்துவிடும். ஆனால், எடுத்தவுடன் மடக் என்று குடித்துவிடும் பால், பழ ஜூஸ் உள்ளிட்ட பானங்களில்தான் ஸ்லோபாய்சன் கொடுக்கப்படுகிறது.
25 நாட்கள் ஆகிவிட்டதால் மண்ணிலிருக்கும் விஷம்கூட உடல் உறுப்புக்களில் ஏறிவிடும் வாய்ப்புள்ளது. அதனால், பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தின் மண்ணையும் எடுத்து பரிசோதித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எம்ஃபாமிங் செய்யப்பட்டதா? கால்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? பற்கள் பிடுங்கப்பட்டதா என்பதெல்லாம் பிரேத பரிசோதனையில் தெரிந்துவிடும்’என்கிறார் விளக்கமாக.
அப்பல்லோ எனும் பெரிய மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் 24 மணிநேர கண்காணிப்பில் இருந்தவருக்கு திடீர் கார்டியாக் அரெஸ்ட் என்பது சாத்தியமே இல்லை.
ஏற்கனவே, ஜெயலலிதா மன அழுத்தத்திற்கான (ல்ழ்ர்ற்ட்ண்ஹக்ங்ய்-750 மில்லி கிராம்) என்ற மாத்திரை களை தொடர்ந்து சாப்பிட்டுவந்தார். மேலும், தடைசெய்யப்பட்ட பயோகிளிட்டஸோன் போன்ற சர்க்கரை வியாதி மருந்துகளை அப்பல்லோ மருத் துவமனை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கலாம்.
இந்த, மருந்துகளின் மூலமாகக்கூட கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கலாம்’’ என்ற கருத்தும் மருத்துவர்கள் வட்டாரத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது.
முழுமையான மருத்துவ அறிக்கையும் அதன் மீதான விசாரணையும்தான் உண்மைகளை வெளிப்படுத்தும். ஆளுந்தரப்பு அதற்குத் தயங்கினால், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” என்கிறார்கள் சட்டம் சார்ந்தவர்கள்.
– Nakkheeran
ஜெயாவை எனக்கு பிடிக்காது என்றாலும்.
அவரது மரணம் புத்திஜிகளால் ஆளாளுக்கு
விமர்ச்சிக்கப்படுவதும்.பிணத்தை தோண்டு
வதும்.பிரச்சனை அனுமார்வால்போல் நீளும்.
எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால் இது தேவை இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் அங்கு நடப்பது எல்லாமே சந்தேகத்துக்கு உரியவை. எவனையும் நம்பமுடிவதில்லை– தமிழ் நாட்டு தொலைக்காட்சிகளை பார்த்தல் புரியும்– இது பனிக்கட்டியின் நுனி தான். அடியில்….? ஊழலிலும் அறியாமையிலும் ஊறிப்போய் இருக்கும் தமிழ் நாடு. என்ன செய்வது? பேருக்குத்தான் தமிழ் நாடு அனால் சுரண்டி ஆளுவது கன்னட ஆந்திர மலையாளிகள்- இவர்கள் எப்படி எல்லா ம் முக்கிய பதவிகளில் உட்கார்ந்து இருக்கிறான்கள்? தமிழன்கள் அவங்களின் பாதத்தை நக்கிகொண்டிருக்கிறான்கள்– கேடு கெட்ட ஜென்மங்கள்.