உலக சாதனையுடன் இந்த ஆண்டை தொடங்கும் இஸ்ரோ…!

isroஇஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவுகனையில் 103 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க தயாராகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கேட்டுகளை தயாரித்து அதன் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த ராக்கெட்டுகளில் வணீக ரீதியில் வெளிநாட்டு ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

இதுவரை, இஸ்ரோ நிறுவனம், 1994 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மொத்தம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் அடங்கும்.

இவற்றை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

இந்நிலையில், தற்போது 103 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் (பி.எஸ்.எல்.வி. சி-37) பொருத்தி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில், பொருத்தப்படும் செயற்கை கோள்கள் அனைத்தும் நானோ வகையைச் சேர்ந்தவையாகும்.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டானது வருகிற 27 ஆம் திகதி விண்ணில் பாய தயாராக இருக்கிறது.

இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் ஒரே ரக்கெட்டில் அதிக செயற்கை கோள்களை அனுப்பியது மிகப் பெரிய உலக சாதனை என்ற பெருமையை இஸ்ரோ பெறும்.

மேலும், இந்த ராக்கெட்டில் வானிலையை துல்லியமாக கணிக்கும் Cartosat–2D செயற்கைக்கோளும் இதனுடன் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

-http://news.lankasri.com

TAGS: