இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

navy_fisheman_001இலங்கையின் கடற்படையினர் தமிழகத்தின் மீனவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

நேற்று முன்தினம் இந்த சம்பவம் கோடியக்கரைக்கு அப்பால் 15கிலோமீற்றர் கடற்பரப்பில் இடம்பெற்றதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தடி மற்றும் கயிறு ஆகியவற்றினால் இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்லையா(50) ஆலமுத்து (50) கோசிப்பிள்ளை(50), காளிதாசன்(40) குமார்(38), மஹேந்திரன்(33),அன்பரசு (28) கண்ணதாசன் (25), ரவிசந்திரன்( 20) ஜெகன்(20) ஆகியோர் இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெகன், ரவிசந்திரன், மற்றும் மஹேந்திரன் ஆகியோரை தமது படகில் ஏற்றியதுடன் அவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மீனவர்களை தொழிலை கைவிட்டு கரைக்கு திரும்பினர். நேற்று முன்தினம் இடம்பெற்ற மற்றும் ஒரு சம்பவத்தின்போது ராமேஸ்வர மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது டிட்டிக்ராஜ் என்ற மீனவர் கடலில் வீழ்ந்தநிலையில் ஏனைய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: