இந்திய எல்லைப்பகுதியில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், காய்கறிகளோ, தொட்டுக்கொள்ள ஊறுகாயோ வழங்கப்படுவதில்லை. வேக வைத்த பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லையில் 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே, மோசமான தட்பவெப்ப நிலையில் பணி புரியும் நாங்கள், பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேணடும் என வேண்டுகோள் விடுத்துள்ளா.
இவரது இந்த வேண்டுகோளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
blob:https://www.facebook.com/b97c33a8-a303-4fb6-923d-1a638be5f2b3
-http://news.lankasri.com
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அங்கு என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியும். கார்கில் போரின்போது ஒரு அமைச்சர் சவப்பெட்டிகளினால் பணம் பண்ணியது எவ்வளவு கேவலம் ? இப்படியும் ஈனங்கள்–சொல்வதற்க்கே குமட்டுகிறது.