சென்னை: தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது.
அரசு பஸ்கள் எந்த ஊரிலும் முழு அளவில் ஓடவில்லை.
ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் 90 சதவீதம் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் 90 சதவீத அளவு மூடப்பட்டுள்ளன.
பல ஊர்களில் 10, 12வது வகுப்புகள் மட்டும் இயங்குகின்றன
மதுரை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆம்னி பஸ்களும் இன்று ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் முழு அளவில் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன
கோவை, ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முடங்கிப் போயுள்ளன.
சென்னையிலும் போராட்டம் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது
சென்னையில் ஹோட்டல்கள், மெடிக்கல் ஷாப்புகள் மூடப்பட்டுள்ளன
அரசுப் பேருந்துகள் சென்னையில் முழு அளவில் ஓடவில்லை
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை