தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், இது மார்ச் 1-ம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. இதில் கோக், பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கும் தடை வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில் மார்ச் 1-ம் திகதி வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com
வாழ்த்துக்கள்!!!