ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோல் 2016-ம் ஆண்டு கலாசார நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இரண்டு அறிக்கையும் திரும்ப பெறுவதாக உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு நாளை மனுதாக்கல் செய்யவிருக்கிறது.
ஜல்லிக்கட்டின் இந்த நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை எதுவும் வராது என கூறப்படுகிறது.
-http://news.lankasri.com
போராடிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
எறும்பூர அம்மியும் நகரும்-
தமிழ் புத்தாண்டுக்கு இப்படி ஒரு போராட்டம் நடத்தினால் என்ன அதுவும் மலேசியாவில்
சீன புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லிய்க்கொண்டிருக்கிறது நம் வானொலி
ஜல்லிக்கட்டு எப்படி மிருகவதை என்று புரியவில்லை– அப்படி என்றால் மிருகங்களை வேலை வாங்குவதே தவறு என்றாச்சே ! அப்படி என்றால் மிருகங்களை காட்டுக்கு அனுப்ப வேண்டியது தானே? தமிழன் என்றுமே மாடுகளையும் மற்ற விலங்குகளையும் போற்றியவன் – ஓர் இரு மடையர்களை தவிர்த்து. அதற்கென்று அந்த விளையாட்டை ஒட்டு மொத்தமாக தடை என்பது தவறே.உச்சநீதிமன்றத்தில் யார் உட்கார்ந்து இருக்கின்றனர்?