தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
முன்னதாக இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் அரசு இதழில் இன்று மாலையே வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-http://news.lankasri.com
இந்த வெற்றி தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை நிரூபித்து இருக்கிறது .இது தொடர வேண்டும் .பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உரிமையாக இருந்த கச்ச தீவுக்கு தமிழக மீனவர்கள் சுதந்திரமாக சென்றுவர போராடவேண்டும். உரிமைகள் மீட்டு எடுக்கப்படவேண்டும் ,மீனவர்கள் வாழ்வில் வசந்தம் மலர வேண்டும் .