இந்த அழகான புரட்சிப் பெண்ணின் கதி..? அம்பலமான சூழ்ச்சி…

beautyஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களின் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது. ஓர் அகிம்சையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

உலக மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் பொலிஸார் கொடுத்த அபார ஒத்துழைப்பு.

காவலர்கள் மாணவர்களுக்கு செய்த உதவிகள் என மிரண்டது உலகம். அதன் பின் ஐந்தாம் நாள் அதே பொலிஸ் தனது கோர முகத்தைக் காட்டியது.

மாணவர்களை வெறியோடு தாக்கியது. தீவைத்தது. தேடிப் போய் வீடு புகுந்து அடித்து நொறுக்கியது பொலிஸ்.

காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் உண்மை காரணம் பன்னீருக்கு மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் உண்டாக்க நடந்த உட்கட்சி சதி என்ற கருத்து வெளிவந்தது.

ஒரு அரசியல் வார இதழ் ஒரு உண்மையைச் சொல்கிறது. சசிகலாவை போராட்டத்தில் கடுமையாக திட்டியும், கேலி பண்ணி கோஷம் போட்டவர்களையும் சில கருப்பு பொலிஸ் படம் எடுத்து சேமித்துக் கொண்டே இருந்துள்ளார்களாம்.

அவர்கள் மூலம் தேடுதல் வேட்டை ஆரம்பம் என்கிறது அந்த வார இதழ். மாணவர்கள் முற்றிலும் நிலை குலைந்து போக வேண்டும் என்பதே நோக்கம்.

இனி எந்தக் காலத்திலும் மாணவர்கள் போராட்டம் என்று இறங்கவே கூடாது என்பதும் கூடுதல் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . அப்போ அந்த அழகான புரட்சிப் பெணின் கதி ? என்ன என்பது அனைவர் மத்தியிலும் எழும் ஒரு கேள்வியாக உள்ளது.

-manithan.com

TAGS: