சென்னை வன்முறை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்.. ஓபிஎஸ்

chennai-riotசென்னை: தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

சென்னையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும் என்றார் .

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.சென்னை மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம், கோவை வஉசி மைதானத்தில் போராட்டம் நடத்தினர். கடைசி நாளான 23ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதனை கண்டித்து பல அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

 

TAGS: