காவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்… இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்

cauvery-waterநாமக்கல் அருகே கழிவுநீரை காவிரியில் திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதியின்றி சாயப்பட்டறைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 200 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு அனுமதியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை என தெரிவிகிறது. சுத்தப்படுத்தப்படாத சாயகழிவு நீரால், நிலத்தடி நீர்வளமும், காவிரி ஆறும் மாசுபட்டு வருகிறது.

இந்நிலையில் சாயக்கழிவுகளை ஏராளமான சாயப்பட்டறைகள் காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து எந்தந்த நிறுவனங்கள் சாயக்கழிவுகளை காவிரியில் திறந்துவிடுகின்றன என அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தினர். அதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றி செயல்பட்டு வந்ததும் சாயக் கழிவுகளை காவியாற்றில் திறந்துவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுத்திகரிப்பு நிலையம் இன்றி சாயப்பட்டறைகளை இயக்கிவரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: