ஜல்லிக்கட்டு விழா.. அதிரும் அவனியாபுரம்… அதிகாலையிலேயே காண குவிந்த பொதுமக்கள்!!

jallikattu-12மதுரை: அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல தடைகைள தாண்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருவதால் அதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.

அதிகாலை முதலே குவிந்த மக்கள்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான அவனியாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே அவனியாபுரம் பகுதியில் திரண்டனர்.

விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்

பலத்த பாதுகாப்புகளுக்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தடைகளை தாண்டி சீறிவரும் காளைகள்

பல்வேறு தடைகளை தாண்டி வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் தழுவி வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களை திணற வைக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரம்பி வழியும் கூட்டம்

இந்த வீர விளையாட்டை காண ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அவனியாபுரத்தில் குவிந்துள்ளனர். கேலரிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் அருகில் உள்ள கட்டடங்களில் ஏறி நின்று மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளித்து வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: