ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கையின் அட்டூழியம்

fisher manசென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. அவர்களுடைய 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 2 படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களையும் கொத்தாக பிடித்துச் சென்றனர். அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் காங்கேசம் துறைமுகத்தில் வைத்து இலங்கை படையினர் விசாரித்து வருகின்றனர். அண்மையில் 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடயே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கை சிறையில் ஏற்கனவே 25 பேர் சிறையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 30 இருக்கும் போதே, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கையிடம் இருக்கும் 119 படகுகளை விடுவிடுக்கவும் மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். என்றாலும் மத்தியில் ஆளும் மோடியின் அரசு மீனவர்கள் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

tamil.oneindia.com

TAGS: