சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார்.
பரபரப்பான அரசியல் சூழலில் வியாழன்று தமிழகம் வருகை தந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். அவரை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது தமது ராஜினாமா கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது என்றும் தாம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துள்ள சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கூடாது எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அத்துடன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் எதனையும் சொல்லி இருக்க மாட்டீர்கள். அடாடா! என்ன அம்மா பாசம்!