தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேலும் இரண்டு எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ட்விட்டரில் கூறியதாவது, வாக்களித்த மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்.
வாக்காளர்களின் குரலை கேட்டு, அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
நேற்று வரை சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த பாண்டியராஜன் தற்போது இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்போம் என புதுச்சேரி அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலில் டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் இந்த கூட்டத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக விடுதியில் பட்டினி இருந்ததாக செய்திகள் வெளியாகின.
தற்போது, தொடரந்து பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அதிகாரித்து வருவதால் சசிகலா தரப்பபு கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-http://news.lankasri.com