உடனே சரணடைய வேண்டும்.. குற்றவாளி சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

sasi_theerppuடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்தார். இதையடுத்து பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் ஜாமினில் வெளிவந்தனர். பின்னர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய தீர்ப்பு

மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி கணக்கில் பிழை இருப்பதாக கூறி 4 பேரையும் விடுதலை செய்தனர். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றம்

இறுதித் தீர்ப்பு இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

குன்ஹா தீர்ப்பை உறுதியாக்கிய சுப்ரீம்கோர்ட்

சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உடனடியாக சரணடைய உத்தரவு

அவர்கள் மூன்று பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஜெயலலிதாவுக்கும் இதே தீர்ப்புதான்

அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: