சென்னை: வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் சூளுரைத்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த 4 வாரங்களில் 75 சதவீதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
வரும் மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம்.
இந்த இரு குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அதிலிருந்து விலகும்படி அறிவுறுத்துவோம். அது நடக்காதபட்சத்தில் இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து அதே கருத்தை தீவிரமாக வலியுறுத்துவோம்.
உள்நாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என வட மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எங்களை அணுகி வருகின்றனர். அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். விரைவில் அனைத்து கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்றார்.
முன்னதாக பெப்சி, கோக் விற்பனையை நிறுத்தவும், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தியதற்கும், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவைச் சேர்ந்த தேவராஜ், ஜலீல், கிரேஸ் பானு, காயத்ரி உள்ளிட்டோர் விக்கிரமராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
-http://tamil.oneindia.com
ஈழ போரில் தமிழ் இன படுகொலையை ஹிந்தியாவுடன் கூட்டு சேர்ந்து நடத்திய அமெரிக்காவுக்கு சரியான நெத்தியடி!!!
தமிழினத்தின் ஒற்றுமைக்கு கிடைக்கின்ற வெற்றியின் தொடர்ச்சி இது இதனால் ஒற்றுமை வெற்றியை கொணரும் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. மற்றவர்களும் இதனால் பயந்தும் இருக்கிறார்கள். ஆக இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பல முறையில் பலர் முயற்சி செய்வார்கள். காரணம் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். என்று நமது முன்னோர் கூறியுள்ளது போல நாம் சிதறியிருந்தால்தான் மற்றவர்கள் நம்மேல் குதிரை ஏறுவார்கள். இந்த ஒற்றுமை தொடரவேண்டும். எந்த காரணத்தாலும் இது சீர்குலையக்கூடாது. நம்மவர்களையே நமக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கையும் பார்ப்பார்கள். சிலரை அவர்தம் சுகத்திற்காக தமிழினத்தை காட்டிக்கொடுக்க செய்வார்கள். இப்படித்தான் நமது முன்னோரில் சிலர் ஏமாந்து இனத்தன் நலன் கருதாமல் நடந்து, இன்று அவர்களுடைய சந்ததிகளும் சேர்ந்தே அவதி படுகின்றனர். இன்று நாம் கண்டுள்ள இந்த ஒற்றுமை சீராக தொடர்ந்தால் இப்பொழுது மட்டுமன்று எப்பொழுதும் ஒரு சிலர் மட்டுமல்ல தமிழினமே நலமோடு வளமாக எப்பொழுதும் வாழும்.பின்பு நமது மரபுபோல் வந்தாரையும் வாழ்வைப்போம். நமக்கு மிஞ்சித்தான் தானம். என் இனத்தை ஏமாற்றி வாழ விரும்பும் மற்றவனை இனங்கண்டு ஒதுக்குவோம். நமது ஒற்றுமையால் நாம் மற்றவர்களை எவ்வைகையிலும் தண்டிக்கவோ பழிவாங்கவோ தேவையில்லை. நாம் நலமுடனும் வளமுடனும் வாழும்போது அடுத்தவரையும் வாழவைப்பது தமிழினம். ஆனால் நாம் மீண்டும் ஏமாந்துவிடக்கூடாது.விழிப்பாய் இருந்துகொள்வோம். இறைவனும் நம்மை தொடர்ந்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.