அச்சம் தரும் ஹைட்ரோ கார்பன்… மீத்தேன் போல விரட்டி அடிக்க தயாரான நெடுவாசல் மக்கள்

protest3புதுக்கோட்டை: தமிழ்நாடு என்றாலே டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு இளக்காரம் தான். தமிழக மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்றால் டெல்லிக்கு எப்போது மகிழ்ச்சிதான். அப்படித்தான் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தங்கள் கிராமம் பாலைவனமாக மாறப்போகிறது என்ற தகவல் தெரிந்த உடன் நெடுவாசல் மக்கள் உஷாராகிவிட்டனர். தினம் தினம் ஒரு போராட்டம் செய்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

வறண்ட நிலத்தடி நீர்

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக சுண்டிப் போயுள்ளது. ஒரு போகம் சாகுபடி செய்வதேற்கே உன்னை பிடி என்னை பிடி என்று விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.

தங்கள் கிராமம் பாலைவனமாக மாறப்போகிறது என்ற தகவல் தெரிந்த உடன் நெடுவாசல் மக்கள் உஷாராகிவிட்டனர். தினம் தினம் ஒரு போராட்டம் செய்து அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வறண்ட நிலத்தடி நீர் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக சுண்டிப் போயுள்ளது. ஒரு போகம் சாகுபடி செய்வதேற்கே உன்னை பிடி என்னை பிடி என்று விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.

குடிநீருக்கு எங்கே போவது?

நிலத்தடி நீருக்கு இந்த கதி என்றால் குடிநீர் பற்றி கேட்க வேண்டியதே இல்லை. பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிக்க நீர் எடுத்து வருகின்றனர். இப்படி வறட்சி தாண்டவமாடும் நெடுவாசலில் பூமியில் துளை போட்டு இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் என்னென்ன தீங்கு விளையுமோ என்ற அச்சத்தில் கிராமவாசிகள் மூழ்கியுள்ளனர்.

அடுக்காய் பிரச்சனை

ஏற்கனவே விவசாயம் கெட்டுப் போய் விவசாயிகள் மரணம், தற்கொலை நடந்து கொண்டிருக்கும் சூழலில் தங்களது நிலத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாய பெருங்குடி மக்களும் கிராம மக்களும் கடுமையாக எதிர்த்து, கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், போராட்டம், என போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

அதிகாரிகள் சிறைபிடிப்பு

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட சென்ற ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சென்ற வாகனங்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளை சிறைபிடித்தனர். வாகனத்தின் முன் அமர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விரட்டியடிப்பு

அதே போன்று, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கிராமத்திற்கு யார் உள்ளே நுழைந்தாலும், கிராம மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். நேற்று பார்வையிடச் சென்ற வருவாய் துறையினரை வழியிலேயே மடக்கி திருப்பி அனுப்பப்பட்டனர்.

27ல் உண்ணாவிரதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 27ம் தேதி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் போராட்டம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கிராம மக்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: