ஜெயலலிதா மரணம் குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்பல்லோ மருத்துவனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், எம்.சி.ஏ விதிகளின் படி நோயாளி குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்றும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார் என அப்போலோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 2 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், வழக்கை மார்ச் 13ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-http://news.lankasri.com