நெடுவாசல் போராட்டக்களத்தில் அம்மாவின் விரல்பிடித்தபடி தினமும், வந்துவிடும் வர்ஷா, அங்கே விளையாடிக்கொண்டிருப்பார். அம்மா கோஷமிடும்போது, அவளும் கோஷமிடுவாள். அவள் குறும்புத்தனத்தை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தவனாய், அவளிடம் பேச ஆரமித்தேன். இங்க என்ன செய்றீங்க எனக் கேட்டேன். போராடுறோம் என்றாள் வர்ஷா..
எதுக்குமா போராடுறீங்க.? என்றேன். சட்டென வர்ஷா. “அரசாங்கம், எங்க ஊர்ல, ஏதோ வாயு எடுக்கப்போகுதாம்.. ‘இரு இரு அம்மாக்கிட்ட கேட்டுட்டு வந்துடுறேன்’ என ஓடியவள், அவரது அம்மாவிடம் ரகசியமாக கேட்டுவிட்டு ஓடிவந்து. ‘’ஹட்ரோ காபன்’னு ஒரு வயு எடுக்கப்போறாங்களாம்.
அது எடுத்தால் எங்க ஊரெல்லாம் அழிந்துபோய், குடிக்கக்கூட தண்ணி இருக்காதாம், வெவசாயம் பண்ணமுடியாமபோய் சோறு கிடைக்காதாம். அது உனக்கு தெரியாதா.? என்றார்..
தினமும், மாமா செல்போன் கொடு, பேனாக்கொடு, என் கையில படம் வரைந்துகொடு என சுட்டித்தனமாய் விளையாடுவாள்.
நெடுவாசல் போராட்டக்களத்தில் நிறைய வர்ஷாக்கள் இருக்கிறார்கள்.
சிறிய குழந்தைக்கு தெரிந்த விடயம் கூடவா அரசாங்கத்திற்கு தெரியாமல் உள்ளது. வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை எனக் கூறும் நெடுவாசல் பெண்மனிகள்.
பெண்கள் முன்னெடுத்த போராட்டம் எதுவும் தோற்றதாக சரித்திரம் இல்லை… நெடுவாசல் வெல்லட்டும்.
-manithan.com
– manithan.com