இந்திய பெண்களுக்கு ஓர் நற்செய்தி

indian pregnant ladyமகப்பேறு காலத்தில் பெண்கள் ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளும் நாட்களை 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்து இந்திய அரசு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நாட்களை 26 வாரங்களாக அதிகரிக்க கடந்தாண்டு மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோவானது இன்று நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும்.

குறிப்பாக, 10 ஊழியர்களுக்கு அதிகமாக உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த புதிய சட்டத்தை பின்பற்றுவது கட்டாயம் ஆகும்.

சர்வதேச அளவில் கனடா அரசாங்கம் தற்போது மகப்பேறுக்காக பெண் ஊழியர்களுக்கு 50 வாரங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கிறது.

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வே தனது பெண் ஊழியர்களுக்கு 44 வாரங்கள் விடுமுறை அளிக்கிறது.

தற்போது மூன்றாவது இடத்தில் இந்தியா இடம்பெற்று பெண் ஊழியர்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க உள்ளது.

இந்த புதிய சட்டமானது ஒரு பெண்ணிற்கு பிறக்கும் முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு பெண் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும்போது அவருக்கு 12 வாரங்கள் மட்டுமே ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: