உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.
உத்திரப்பிரதேசம்
உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 324 தொகுதிகளில் பெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சிரோமணி அகாலிதளம் பாரதிய ஜனதா கூட்டணி 18 இடங்களில் வென்றுள்ளது. மற்றவை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
உத்திரகண்ட்
உத்திரகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா 56 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 11 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் ஹரீஷ் ராவத் ஹர்துவார் புறநகர், கிச்சா என போட்டியிட்ட 2 தொகுதியிலும் படுதோல்வியடைந்தார்.
மணிப்பூர்
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாகா மக்கள் முன்னணி 4 இடங்களிலும் , பிற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கோவா
கோவா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 13 இடங்களை கைப்பற்றி உள்ளது. பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மன்ட்ரம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர், காங்கிரஸ் வேட்பாளரிடம் 7,119 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
-http://news.lankasri.com