தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. கடைபிடிக்குமா கர்நாடகம்

cauvery-water1டெல்லி: காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கர்நாடகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக 3 வாரம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி பிப்ரவரி 7ம் தேதி தொடங்கிய காவிரி வழக்கு விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மீண்டும் இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கர்நாடக அரசிற்கு வினாடிக்கு 2000 கன அடி நீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி நதி நீரை தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்காமல் இருப்பது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜுலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது.. சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கர்நாடக அரசிற்கு வினாடிக்கு 2000 கன அடி நீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி நதி நீரை தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்காமல் இருப்பது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜுலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, எங்கள் மாநிலத்தின் பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: