”வரும் மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். அதற்கு முன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, நேற்று டில்லியில், தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படுமென்றும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி விரைவில் அளிக்கப்படுமென்றும், வெளியுறவு அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.
பிரதமர் மோடி, வரும் மே மாதம், இலங்கை செல்லஉள்ளார். அதற்கு முன்பாகவே, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-http://www.dinamalar.com
இது வரை வெறும் வாயை வைத்துக் கொண்டே சாதனைகள் புரிந்து கொண்டு இருக்கிறார்! இதாவது நடக்குமா பார்ப்போம்!
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திரவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
மக்களின்போராட்டங்களின்சூட்டைதண்ணி
உற்றி அணைக்கமோடியின்ஏவலாள்
பொன்னார்,பொன்னாருக்குவாக்குருதி
தரத்தான்தெரியும்,நிறைவேற்றத்திரியாது
தமிழனை புண்ணாக்கியது போதும் புண் .ராதாகிருஷ்ணன்…..
ராதாகிருஷ்ணனால் ஒன்றும் புடுங்க முடியாது. சமயத்திற்கு தகுந்தாற் போல் ஆமாம் போட்டு தப்பித்துக்கொள்வார்.