அதிமுகவின் இலைச்சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதேபோல் அதிமுக பெயரை பயன்படுத்தவும் இருதரப்புக்கும் தடை விதித்துள்ளது.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலே இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது. இருதரப்பினரும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர்.
மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் மாலையே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது. முடக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை எம்.ஜிஆர். மறைவுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக என்ற பெயரை இருதரப்பும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இரு தரப்பும் புதிய கட்சியின் பெயரை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20 பக்க ஆவணங்களை படித்து உடனடியாக தீர்ப்பு வழங்குவது கடினம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வரும் எப்ரல் 17ம் தேதி வரை தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் கெடு விதித்துள்ளது.
இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளவே சின்னம் முடக்கப்பட்டது. ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை.
இன்று இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலைச்சின்னம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதன் காரணமாக, காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-http://www.tamilwin.com
நல்ல செய்தி தான்! . பா.ஜ.க. போட்டியிடுவதால் இப்படி நடக்கும் என்பது எதிர்பார்த்தது தான்!
அதோடு மீதம் உள்ள எல்லா திராவிட திருட்டு காட்சிகளையும் முடக்கினால் தமிழனுக்கு நன்மை பயக்கும்! தமிழர் நாடு தமிழர் ஆட்சி! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!