பேஸ்புக், டிவிட்டரில் மூழ்கும் இளைஞர்கள் மத்தியில் பெங்களூர் இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

lakeபெங்களூர்: பெங்களூரில் உள்ள 3 ஏரிகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்து அதில் வெற்றி கண்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

கட்டட கலை நிபுணரான ஹிமாஷவ் ஆர்தீவ் (28) பெங்களூரைச் சேர்ந்தவராவார். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், வாழ்க்கை முறை குறித்த சமூக ஆர்வலரான இவர், அண்மையில் இயற்கை முறைகளை பயன்படுத்தி ஏரிகளை சுத்தம் செய்யும் பணியை பற்றிய ஆய்வுக் கட்டுரையை படித்தார்.

அதாவது பிவிசி பைப்புகளில் மிதவை போன்ற ஒரு அமைப்பை கட்டமைத்து அதில் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட நைட்ரேட்டுகள், பாஸ்பேட், சல்பேட்டுகள் ஆகியவை அடங்கிய ஒரு கலவையை அதில் இடவேண்டும்.

இந்த முறை கனடாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மிதவையானது தண்ணீரின் தரத்தை அதிகரிப்பதோடு, ஏரியில் உள்ள செடிகள், விலங்குகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஒவ்வொரு சில குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை செடிகளை மறுபடியும் நடவேண்டும்.

இது போன்ற செயல்முறை செய்து அந்த மிதவையை கடந்த 2016-ஆம் ஆண்டு புட்டஹள்ளி ஏரியில் மிதக்கவிட்டார். இதனால் இந்த ஏரியில் உள்ள நீர் தூய்மை அடைந்ததை கண்டார். இதே முறை பயன்படுத்தி கைகொண்டஹள்ளி ஏரி மற்றும் ஜக்கூர் ஏரி ஆகிய ஏரிகளையும் அவர் சுத்தம் செய்து வெற்றி கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது பயோமி என்விரான்மன்டல் டிரஸ்ட் (Biome Environmental Trust) மூலம் மேலும் பல ஏரிகளை சுத்தம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இவர் செய்த அந்த மிதவையை தயார் செய்ய வெறும் ரூ.3000 மட்டுமே ஆகும். குறைந்த செலவில் எளிமையாக முறையில் குறிப்பாக ஆட்கள், இயந்திரங்களை பயன்படுத்தாமல் ஏரியை சுத்தம் செய்த ஆர்தீவின் எளிமையான செய்ல்பாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: