ஒவ்வொரு உண்மையான தமிழனும் கட்டாயம் படிக்கவும்

vaiko-thirumaஇலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வரும் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் சார்பில் உதவிகள் செய்துகொடுக்கப்பட்டாலும், அந்த உதவிகள் மூலம் மக்களின் முழுத்தேவைகளும் பூர்த்தியாகப்படவில்லை என்ற வார்த்தைகளே தமிழக மக்களின் பகுதியில் இருந்து ஒலிக்கின்றன.

இதுபோன்று அல்லல்படும் தமிழர்களுக்கு, அரசாங்கம் சார்பில் மட்டுமல்லாது சில தனியார் அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வருகின்றன.

அவர்களில் ஒருவர்தான், தாயகத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜாவால் நடத்தப்படும் ஞானம் பவுண்டேசன்.

இந்த நிறுவனமானது, வவுனியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு 22 கோடி ரூபா செலவில் 150 வீடுகளை கட்டிமுடித்துள்ளது. தற்போது இந்த வீடுகளை வழங்குவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, ஞானம் பவுண்டேசன் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளை விட, சூப்பர் ஸ்டாரை அழைத்துள்ளதுதான் தற்போது ஊடகங்கள் மத்தியில் விவாதப்பொருளாகியுள்ளது.

இதில், ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருந்தது, பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கத்தான், அவர்களுக்கு உதவி செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஆனால், இவை அனைத்தும் அதில் மறைக்கப்பட்டு, லைக்கா நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே, இப்படி ஒரு செயலை செய்துள்ளது என்ற கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழக அரசியல் தலைவர்களான வைகோ, திருமாவளவன் போன்றோர் ரஜினியின் இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், ரஜினிகாந்தின் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில், லைக்கா நிறுவனம் சுயவிளம்பரம் செய்துகொள்வதற்காக இப்படி செய்துள்ளது என்று கருத்துக்களை கூறிக்கொள்பவர்கள், அதில் இருக்கும் உதவியையும், தமிழர்கள் அதனால் பயன்பெறுவதையும் உற்றுநோக்க வேண்டும்.

அப்படி, விளம்பரம்செய்து கொண்டாலும், அதில் பயன்பெறுவது தமிழர்களே, ஆனால் இவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறார்கள் சில தமிழக அரசியல் தலைவர்கள்.

கோடி கோடியாய் சம்பாதிக்கும்போது, அந்த பணத்தால் சில தமிழர்கள் பயனடைவதில் தவறேதும் இல்லை, ஒரு தமிழன் பயன்பெறுவதை மற்றொரு தமிழர்கள் தட்டிக்கழிப்பது போன்று இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இப்படி, பல்வேறு விடயங்களை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டு இருப்பதன் மூலம் தான் தமிழர்களுக்கு கிடைக்கின்ற உதவிகள் கிடைக்காமல் போகும் நிலமை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதனால், தமிழர்களாலேயே தமிழர்கள் பயன்பெறும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகின்றன.

– ஒரு தமிழனின் மனம் திறந்த மடல்

-http://news.lankasri.com

TAGS: