லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., சட்டமன்ற தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது. அதே போல் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்பும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் உயர்நீதிமன்றம் பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே சம்மந்தப்பட்டவர்கள் பேசி ஆலோசித்து தீர்த்து கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியிருந்தது.
இந்நிலையில் லக்னோவில் சில முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரவித்து பேனர் வைத்துள்ளனர். பேனர் வைத்த முஸ்லிம் அமைப்பினர் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-dinamalar.com