60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா..!

தலைலாமாதிபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார்.

திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார். மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா நரேன் சந்திரதாஸை சந்தித்துள்ளார்.

திபெத்தியர்களை மீட்பதற்காக பணிபுரிந்த அசாம் ரைப்வல்ஸ் இராணுவப்படையின், ஓய்பு பெற்ற உறுப்பினரான தாஸ் உள்ளிட்ட இந்தியாவிற்குள் தன்னை பாதுகாப்பாக அழைத்து வந்த குழுவின் ஒரு பகுதியை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு அனைவர்க்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனாவை, தலாய் லாமாவின் வருகை கோவப்படுத்தியுள்ளதோடு, எல்லை பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்தியா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாமெனவும்,

தலாய்லாமா உள்ளிட்ட குழுவைச் சேர்ந்த பிரிவினைவாத ஆர்வலர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என, சீன வெளியுறவுதுறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் எச்சரித்திருந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் தலாய்லாமா பங்குபற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.athirvu.com

TAGS: