குரங்காக வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி: மனிதர்களை கண்டு பயந்து ஓடும் பரிதாபம்

உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சரணாலயத்தில் குரங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Katarniaghat சரணாலயத்தில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 வயது சிறுமி ஒருவர் குரங்களுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இதைக் கண்ட பொலிசார் அச்சிறுமியை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் குரங்குகளோ சிறுமியை மீட்க விடாமல் கடிக்க முயற்சி செய்துள்ளது. குரங்கைப் போன்றே சிறுமியும் இவர்களை கடிக்க முயன்றுள்ளார்.

அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், குரங்குகளிடம் இருந்து சிறுமியை மீட்க முயன்றபோது, குரங்குகள் தன்னை நோக்கி சீரியதாகவும், அதேபோல் சிறுமியும் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதித்த சிறுமி பேசவும் தெரியாமல், மொழியும் புரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுவருதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள மனிதர்களை கண்டு அஞ்சுவதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி சிறுமி எந்த ஒரு உணவையும் நேரடியாக வாயால் உண்பதாகவும், விலங்குகளை போல் இரண்டு கை மற்றும் கால்களை சேர்த்து மண்டிபோட்டு நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் சிறுமிக்கு தொடந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவரது மாற்றத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com

இந்தியாவில் ஒரு நிஜ மோக்லி! விலங்குகள் போன்று நடந்துகொள்ளும் சிறுமி?

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமி, விலங்குகள் போன்று நடந்துக் கொள்வது அதிகாரிகளை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜங்கிள் புக் திரைப்படத்தில் வரும் மோக்லி என்ற சிறுவன், காட்டில் விலங்குகளோடு சேர்ந்து செய்யும் செயல்கள் வியப்பில் ஆழ்த்தும்.

அதேபோன்ற செயல்களுடன் ஒரு சிறுமி உத்தரபிரதேச காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டம் காதர்நியாகாட் வனப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 8 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.

அந்த சிறுமியின் நடவடிக்கையானது விலங்குகளை போன்று காணப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில தலைமை மருத்துவ அதிகாரி டிகே சிங் பேசுகையில், ‘இரு மாதங்களுக்கு முன்னதாக சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள். அந்த சிறுமி விலங்குகளை போன்று சாப்பிடுகிறாள்.

நடக்கிறாள், விலங்குகளை போன்றே ஓடுகிறாள், மனிதர்களை கண்டு விலகுகிறாள். அவள் தோலில் அடிபட்டதற்கான காயங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

சிறுமிக்கு நடப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இருந்தாலும் விலங்குகளை போன்றே கை கால்களை பயன்படுத்துவதாகவும் அவளை கவனித்து வரும் டாக்டர்கள் கூறுகின்றனர். அதேசமயம், அவளால் பேசவோ எழுதவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட அந்த சிறுமி காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

-tamilwin.com

TAGS: