5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்

madyapradesh

போபால்:மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்களை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று(ஏப்-7) தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் 3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கும் உணவகங்களை நடத்தி வருகின்றன.இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ,5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை, இன்றுஏப்-7) குவாலியரில் தொடங்கி வைத்தார்.

49 மாவட்டங்கள்

அந்த்யோதயா ராசோய் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 49 மாவட்டங்களில் இந்த மலிவு விலை உணவகம் செயல்படவுள்ளது. இந்த உணவகங்களில் நான்கு சப்பாத்திகள், தால், காய்கறி கூட்டு ஆகியவை 5 ரூபாய்க்கு வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் 11 மணியிலிருந்து 3 மணி வரை இந்த கேண்டீன்கள் திறந்திருக்கும். தினசரி 2000 பேர் உண்ணும் வகையில் உணவுகள் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

-dinamalar.com

TAGS: