நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற உடன் மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்த்தனர்.
பாஜகவின் மோடி தலைமையிலான அரசு அச்சே தின் எனப்படும் நல்ல நாள் குறித்த செயல்பாடுகளில் பல யூ-டர்ன்களை சந்தித்துள்ளது. அவர்கள் கூறியது ஒன்று செயல்படுத்துவது ஒன்றாக உள்ளது. இதனால் யூ-டர்ன் அரசு என்று அழைக்கும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் தாங்கள் கொண்டுவந்துள்ள திட்டங்களைத் தான் மோடி அரசு தற்போது நிறைவேற்றி வருகின்றது என்று கூறிவருகின்றது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வந்தது, ஆனால் இப்போது ஆட்சியைப் பிடித்த பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லை. இதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையே நாம் இப்போது பார்கப்போகிறோம்.
அன்னிய நேரடி முதலீடு
2013-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு அன்னிய நேரடி முதலீட்டினை 49 சதவீதம் வரை உயர்த்த முயன்ற போது நரேந்திர மோடி அவர்கள் காங்கிரஸ் அரசு இந்தியாவை மொத்தமாக வெளிநாட்டவர்களுக்கு விற்க முயல்கின்றது என்று விமர்சனம் செய்தார். இப்போது பாஜக அரசு அதே 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு முழுவது ஒத்துழைப்பு அளித்த அந்த மசோதா தள்ளப்பட்டது. ஆனால் ராஜிய சபாவில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. மேலும் 2016-ம் ஆண்டு 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் டிவிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் கார்டு
மக்களவை தேர்தலின் போது ஆதார் அட்டைத் தேவையற்றது என்று பாஜக விமர்சித்தது. நந்தன் நீலக்கேனி ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தும் அளிக்கப்படும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டார். பின்பு மோடி அரசு அட்சியைப் பிடித்த பிறகு ஆதார் அட்டைக் கண்டிப்பாக தேவை என்று எல்லாத் திட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதார் தேவையற்றது என்று கூறிய பாஜக இன்று ஆதார் அட்டை மூலம் மத்திய அரசுக்கு 70 கோடி வரை நிதி சேமிக்க இயலும் என்று கூறியது.
நிலப்பரிமாற்ற ஒப்பந்தம்
பாஜக எதிர் கடைசியாக இருக்கும் போது எல்லையில் உள்ள நிலப் பிரச்சனைக்கான நிலப்பரிமாற்ற ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தது. அசாம் பாஜக துணை தலைவரும் இதனால் எந்த பயனும் இல்லை என்று கூறிவந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு நாள் பயணமாக அசாம் சென்ற பிரதமர் மோடி இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தை போட்டது மட்டும் இல்லாமல் இது அசாமின் பாதுகாக்கவே என்றும் கூறினார்.
வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள்
தேர்தலின் போது வங்க தேசத்தவர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அவர்களை ஆதரித்த பாஜக அரசு இலவச விசா அனுமதியையும் வழங்கியது.
அணுசக்தி ஒப்பந்தம்
காங்கிரஸ் ஆட்சியின் போது அணுசக்தி ஒப்பந்தம் நட்டு நலனுக்கு எதிரானது என்று கூறி வந்தது, இதனால் இதற்கான ஒப்பந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. பிறகு பதவிக்கு வந்த உடன் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெருமையான தருணம் என்று கூறி அமெரிக்காவுடன் இணைந்து கையெழுத்தும் போட்டது.
கருப்புப் பணம்
எதிர்க் கட்சியாக பாஜக இருக்கும் போது மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவோன் என்று கூறினார். இதுவே ஆட்சிக்கு வந்த பிறகு கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது.
ரயில் கட்டணம்
ரயில் கட்டணம் 2 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோடி அவர்கள் அன்று பிரதமரா இருந்த மன்மோகன் சிங் அவர்களுக்கு உடனடியாக ரயில் கட்டண உயர்வை வாப்பஸ் பெற வேண்டும் என்றார். பாஜக அரசு ஆட்சிய பிடித்த உடன் 14.2 சதவீதம் ரயில் கட்டணங்களையும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் வரையும் உயர்த்தியது. இதனால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்தது.
ராவ் இந்திரஜித் சிங்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ராவ் இந்திரஜித் சிங் மிகப் பெரிய ஊழல் குற்றவாளி அவர் மீது கண்டிப்பான நடவடிக்கை வேண்டும் கூறிவந்தது. இதுவே ஆட்சிக்கு வந்த பிறகு அவர் உடனடியாக சுத்தமானவர் ஆனார், ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய அந்தர் பல்டி பாருங்கள்.
மின்சார கட்டணம்
டெல்லி தேர்தலுக்கு முன்பு 30 சதவீதம் விலை குறைவான மின்சாரம் அளிக்கப்படும் என்று கூறி வந்தது. ஆனால் பதவிக்கு வந்த பிறகு இரண்டு முறை மின்சார கட்டணம் 8.32 சதவீதம், 7 சதவீதம் என உயர்த்தப்பட்டது.
செல்லா ரூபாய் நோட்டுகள்
2014-ம் ஆண்டு 2005 ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆர்பிஐ அறிவித்த போது இதனை பாஜக எதிர்த்தது. ஆனால் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று கருப்பு பணத்திற்கு எதிராகச் செய்யும் நடவடிக்கையாக மத்திய அரசு அமல்படுத்தியது.
-http://tamil.goodreturns.in