கொடுமை.. ஒரு ஓட்டுக்கு ரூ. 4000! விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட திடுக் ஆவணங்கள் லீக்!

vijayabaskar

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு ஓட்டுக்கு ரூ.4000 தர திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனை வெற்றி பெற வைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பக்கங்கள் கொண்ட அந்த பட்டியலில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான அணி இந்த பணியை செய்துள்ளது. ஒரு வாக்காளருக்கு கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு என்றும் எத்தனை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு வைத்துள்ளனர்.

முதல்வர் அமைச்சர்கள்

இந்த பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் யார் யார் எந்த பகுதிக்கு பணத்தை தர வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

கோடி கோடியாய் பணம்

ஒரு ஓட்டுக்கு ரூ. 4000 வீதம் மொத்தம் 85% வாக்காளர்களை பணத்தால் அடித்து வாக்குகளைப் பெற திட்டமிட்டுள்ளனர். 256 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு 89 கோடி அளவிற்கு பணத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆவணம் கசிந்தது

எப்படி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆவணங்கள் கிடைத்ததாக வருமானவரித்துறை சார்பில் கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் கசிந்தது எப்படி என்பது தெரியவில்லை. கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்ட ஆவணம் மட்டுமே எப்படி குறிப்பாக கசியவிடப்பட்டது என்று தெரியவில்லை.

400 கோடி பட்டுவாடா

ஆர்.கே. நகரில் வாக்காளர்களை பணத்தால் அடித்து எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று டிடிவி தினகரன் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலுக்காக சுமார் 400 கோடி வரை பணத்தை செலவு செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

முதல்வருக்கு சிக்கல்

விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதல்வர் உட்பட 8 அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதால் அனைவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணம் விநியோகம் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் கூறினாலும், இந்த பட்டியல் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்பதே உண்மை.

tamil.oneindia.com

TAGS: