நந்திக்கு வெளியே நந்தனாரை நிறுத்தியவர்கள்தான்
நந்திக்கு வெளியே தேவாரத்தையும் நிறுத்தினார்கள் !
நடராஜர் என்னும் சிவனைப்பற்றி தமிழில் பாடப்பட்ட அற்புதமான ஒரு தொகுப்பு தேவாரம். திருமந்திரம் என்ற அதி அற்புதமான அறிவுநூலை எழுதி வெளியிட்ட திருமூலரின் இடமும் சிதம்பரமே…
அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஆடல் நாயகன் நடராசர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடியவர்களை அடித்து உதைத்த தில்லை வாழ் தீட்சிதர்கள், சமஸ்கிருதம்தான் நடராஜருக்கு தெரிந்த மொழி (!) என்று வாதிட்டு இன்றுவரை சமஸ்கிருதத்திலேயே பூசைகள் செய்து வருகின்றனர்.
தட்டி கேட்டால்…ஆயுதம் தாங்கவும் (!) தயங்குவதில்லை தேவலோகத்தில் இருந்து நேரே பூமிக்கு வந்த அந்த தில்லைவாழ் தீட்சிதர்கள்.
அவர்களின் வாதம் இதுதான், தேவாரம் பாட நாங்கள் தடை சொல்லவில்லை..ஆனால் நந்திக்கு வெளியே நின்று பாடிவிட்டு போகட்டும். சிற்றம்பல மேடையிலும், கர்ப்பகிரகத்தின் உள்ளும் சமஸ்கிருதத்தில்தான் நாங்கள் பூசைகள் செய்வோம் என்பதே தீட்சிதர்களின் வாதம்.
ஆனால், சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுதல் எமது உரிமை. சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியே உயிர் துறப்பேன் என்று போரிட்டவர் ஆறுமுகசாமி.
அந்த ஆறுமுகசாமி அவர்கள் இன்று காலமானார்.
ஆறுமுகசாமிகள் போராடுவது…தனிநாடு கேட்டு அல்ல…தமிழில் பாடல் பாடமட்டுமே…அதுவும் தமிழ்நாட்டில் !
– விஷ்வா விஸ்வநாத்
-facebook.com
அன்னாரின் உயிர் இறைவன் திருவடிப்பேறு பெற்றிட வேண்டுகிறோம். சிவசிவ.
சிவனுக்கு கருப்பு தோலு புடிக்காதோ? அதனாலேதான் எங்கள வெளியே நிக்க விட்டுட்டாரு!
தன்மானமுள்ள தமிழர் !! தலை வணங்குகிறோம். இறையெனும் பிரபஞ்சப் பெருவெளியில் அன்னாரின் ஆத்மா சங்கமிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறோம். தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிலேயே கிடைக்கும் அங்கீகாரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்நிலை மாற இவர் போன்று மேலும் ஆயிரமாயிரம் சிவனடியார்கள் உருவாக நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
கருப்புத் தோல் பிடிக்காதது சிவனுக்கல்ல. சிதம்பரத்தில் பணிபுரியும் அத்வைதிகராகிப் போன சுமார்த்த தீட்சதர்களுக்குத் தென்னாடுடைய சைவம் பிடிக்காது. அவர் வைதிகச் சைவர். நமக்குதான் சமயம் என்றால் அதுவென்ன என்று தெரியாதே!
கிருஷ்ணன் கருப்பன் தானே. மகாபாரதத்தின் முக்கிய பாத்திரம் அவன்தானே.அப்படி இருக்கும் போது கருப்பு ஏன் கீழே தள்ளி மிதிக்கப்படுகிறது?
ஓம் நமசிவா
சிவனுக்கு கருப்பு பிடிக்காது அல்ல. பிறகு ஏன் கருங் கல்லில் சிலை வடிக்க வேண்டும்.
50 வருஷம் திராவிட கழகம் ஆட்சி செய்கிறது . ஏன் தமிழ் மொழியில் அல்லது தேவாரம் படுவதை கட்டாயமாக்க கூடாது. கோவில் உண்டியல் பணம் பிறகு நுழைவு கட்டணம் இப்படி நிர்வாகம் மற்றும் த்ரிராவிட கழகம் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கலாம் , ஆனால் தேவாரம் கட்டாயம் அமுல்படுத்தமுடியாது. காரணம் இந்து மதம் , ஆட்சி நடத்துவது திராவிட கழகம் . ஆனால் கோவில் வருமானத்தில் பங்கு போடலாம்.
முட்டாள் ஜனங்கள் இவர்களை நம்மில் மானத்தையும் உடமைகளையும் இழந்தது தான் மிச்சம் இப்பொழுது இந்த தமிழ் நாட்டில் . பெயர் மட்டும் தான் தமிழ் நாடு.
ஐயா loganathan அவர்களே– எனக்கு தெரிந்த வரையில் திராவிட கழகம் தமிழுக்கு அதிகம் செய்திருக்கிறது. தயவு செய்து தமிழ் நாட்டுக்கு போய் சிறிது ஆராய்ந்து பாருங்கள்– அங்குள்ள நிலைமை பற்றி புரியும். யாருமே அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியும் -1974 என்று நினைக்கிறேன்- இன்றும் ஒன்றும் புடுங்க முடியவில்லை– இதுதான் தமிழிழ் நாட்டு மக்கள் ஆட்சி – அங்கு கண்ணுக்கு தெறியாத ஆட்சியின் பலம் அதிகம். பார்ப்பனர்களின் அதிகார பலம் அவ்வளவு .சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களுக்கு பெரிதும் உதவியவர்கள் திராவிடக்கழகத்தார்.
ஆயிரம் பெரியார் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் !! தமிழ் நாட்டில் தமிழுக்கு இடமில்லை !! தமிழ் நாட்டு தமிழனெலாம் நாக்கை பிடிங்கி கொண்டு சாகட்டும் !!
சாமியோ!……அவனின்றி ஓர் அணுவும் அசையாது…ன்னு சொன்னாங்க…அப்போ இந்த திருவிளையாடலை யாரு நடத்துறா?
மன்னிக்கவும்! சிவனடியார்களுடன் திராவிடத்தை சேர்க்க வேண்டாம்!!!
ஐயா கருப்பு அவர்களே சிறிது உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். நான் திராவிடத் தமிழை ஒரு காலகட்டத்தில் வரவேற்றவன் ஆனால் இன்று தமிழர் தமிழை ஆதரிப்பவன்.– காரணம் மற்ற திராவிடர்கள் நம் தலையில் இன்று மிளகாய் அரைத்துக்கொண்டிருக்கிறான்கள்– எனக்கு தமிழ் பற்றை ஊட்டியது தி மு க –இதை நான் மறுக்க முடியாது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்லது செய்தால் நான் வரவேர்ப்பேன். திராவிட முன்னேற்றச கழகம் தமிழர் முன்னேற்ற கழகமாக மாற வேண்டும்.