நிர்வாண சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னவங்கதான் நிர்வாணமா போராடுன விவசாயிகளை கைது செய்தாங்க!

vivasaayi

டெல்லி: டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியும் பிரதமர் மோடி அவர்களை கண்டுகொள்ளாததை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் நேற்று 28வது நாளாக போராட்டம் நடத்திய விவசாயிகளை பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற அம்மாநில போலீசார் அதிகாரிகளிடம் மனுவை அளிக்கச் செய்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகம் எதிரிலேயே நிர்வாணமாக சாலையில் உருண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடியை கண்டித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..

சாமியாருக்கு பாதுகாப்பு..

அன்னைக்கு நிர்வாணமா சுத்துன சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்ன பயலுவதேன்… என நிர்வாணமாக போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது இந்த மீம்..

புதிய இந்தியா

பத்து லட்சம் ரூபாயில் ஆடை அணியும் பிரதமரும்… அவரை பார்க்க நிர்வாணமாய் விவசாயிகள் போராடுவதும் தான் புதிய இந்தியா… என்கிறது இந்த மீம்..

மோடி அரசின் செயல்பாடற்ற…

அப்போ டெல்லியில விவசாயிங்க நிர்வாணமா போராடுறது மோடி அரசின் செயல்பாடற்ற நிலைமை தெரியுமா ?? என கேட்கிறது இந்த மீம்…

மதிக்கப்படவில்லை விவசாயிகளே..

கழுத்தில் ருத்திராட்ச மாலையோ… தலையில் ஜடா முடியோ.. உடம்பு முழுவதும் திருநீரோ இல்லை!! அதனால் உங்களது நிர்வாண போராட்டம் இந்தியாவில் மதிக்கப்படவில்லை விவசாயிகளே…

வலி புரிய வாய்ப்பு இல்லை…

10 லட்சம் ரூபாய்க்கு கோட் போடுரவருக்கு எல்லாம் நிர்வாண போராட்டத்தின் வலி புரிய வாய்ப்பு இல்லை… என்கிறது இந்த மீம்…

நாங்க பார்ப்போம் சார்…

சொந்த நாட்டு விவசாயியையே நிர்வாணமா போராட வச்சு யாராவது வேடிக்கை பார்ப்பாங்களா? நாங்க பார்ப்போம் சார்…

கண்டுகொள்ள யாரும் இல்லை!

எத்தனையோ மீடியா மக்கள் உள்ள இந்த நாட்டில் ஒரு விவசாயி வறுமையால் தற்கொலை செய்தால் கண்டுகொள்ள யாரும் இல்லை! என்கிறது இந்த மீம்…

tamil.oneindia.com

TAGS: