திருப்பூரில் பெண்கள் மீது போலீஸ் தடியடி.. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

tirupur

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

பெண்ணை ஓங்கி அறைந்ததற்கு தமிழகம் முழுவதும் ஏடிஎஸ்பி-க்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் பாண்டியராஜன் மீது உயர் நீதிமன்றத்தில வழக்கும் தொடுக்கப்பட்டது.

தகவலறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸார் தடியடி குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வரும் 2 வாரங்களுக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: