விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு சதி: கடும் அதிர்ச்சியில் விவசாயிகள்

farmers-protest2345விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்ப்பார்த்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயிர்க்கடனை தள்ளுபடி, போதிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 29 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சித்தலைவர் நேரில் ஆதரவளித்துள்ளனர்.

இருப்பினும் மத்திய அரசு சார்பாக இதுவரை எந்த அமைச்சரும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை அலிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாடைகட்டி போராட்டம், தழைகீழாக நிற்கும் போராட்டம், பாம்புக்கறி, எலிக்கறி தின்னும் போராட்டம், அரைநிர்வாண போராட்டம் என்று தினம் ஒரு வடிவத்தில் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாததால் முழு நிர்வாண போராட்டமே நடத்தி இந்தியாவையே அதிர வைத்தனர் விவசாயிகள்.

இதனைடையே மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்திய விவசாயிகளை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துப் பேசினார். இந்த சந்திப்பில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், நல்ல முடிவை அறிவிப்பதாக கூறி விவசாயிகளை அனுப்பிவைத்தார்.

ஆனால் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வுகிடக்கும் என்று நம்பிக்கையோடு திரும்பியவர்களுக்கு நள்ளிரவில் அதிர்ச்சி தரும்படியாக மத்திய அரசிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது.

போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளதை அடுத்து அதிர்ந்து போயுள்ளனர் விவசாயிகள்.

இதனிடையே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் அது மத்திய மோடி அரசின் கொள்கை முடிவு எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலிருப்பதாக சமூக ஆர்வலகர்கள் தெரிவித்துள்ளனர்.

-lankasri.com

TAGS: