டாஸ்மாக் மதுபான கடைகளை சுடுகாட்டில் துவக்கலாம்.. வசந்தகுமார் பலே ஐடியா

vasanth-kumarசென்னை: டாஸ்மாக் மதபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க எதிர்ப்பு உள்ளதால், அவற்றை சுடுகாடுகளில் திறக்கலாம் என்று, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் (காங்.) கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊர்களுக்குள் அவற்றை கொண்டுவர தமிழக அரசு முயல்கிறது. ஆங்காங்கு அதற்கு எதிராக மக்கள் சுய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், திருநெல்வேலி, கேடிசி நகர்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் வசந்தகுமார் துவக்கி வைத்தார்.

இதன்பிறகு, நிருபர்களிடம் வசந்தகுமார் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்குப் பதில், சுடுகாட்டில் திறந்தால் நல்லதாக இருக்கும். ஏனெனில் மதுப் பிரியர்கள்மது குடித்துவிட்டு அங்கேயே இருந்து கொள்வார்கள் என்றார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசின் செயல்பாடு மோசமாக இருக்கும் இந்தச் சூழலில் மத்திய அரசு அசுர பலத்துடன் இருப்பதால் தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

tamil.oneindia.com

TAGS: