ஒன்றாக இணையும் அதிமுக அணிகள் – சசி சபதத்தை தவிடு பொடியாக்கியதா ஜெ. “ஆன்மா”?

aiadmkஅதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டு இரு அணிகளும் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : அதிமுக கட்சியையும், ஆட்சியையும் தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்து காப்பேன் என்று சசிகலா சிறை செல்லும் முன் செய்த சபதம் பொய் என்பதை நிரூபித்து மீண்டும் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் “ஆன்மா”தான் இணைத்துள்ளதாக அதிமுகவினர் நம்புகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்ததையடுத்து, கட்சியையும் ஆட்சியையும் சசிகலா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதில் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 7ந் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் மேற்கொண்டதோடு, சசிகலா குடும்பத்தினரால் தான்

அவமானப்படுத்தப்பட்டதாகவும் மிரட்டி ராஜினாமா செய்யப்பட்டதாகவும் கூறினார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்ட நிலையில் அவருக்கு 11 எம்பிக்களும், 12 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

நழுவிய சின்னம்

ஆர்.கே நகர் தேர்தலிலும் கூட அதிமுக இரு அணிகளாக செயல்பட்டதால் இரட்டை இலை சின்னம் கைநழுவியது. இந்நிலையில் அதிமுகவில் பிளவு இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் விரும்பியது போல மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

2 முறை பேச்சு

இன்று அடுத்தடுத்து 2 முறை இது தொடர்பாக அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டிலும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

தொண்டர்கள் உற்சாகம்

இந்த ஆலோசனையின் முடிவு சுபமாகவே இருக்கும் என்பதால் மறைந்த ஜெயலலிதாவின் ஆசியுடன் அவர் ஆத்மா நினைத்த நல்லவர்களைக் கொண்டே கட்சி செயல்படப் போவதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.

சத்தியம் உண்மையாக

இருந்தால் அம்மா சமாதி முன்பு யார் பொய் சத்தியம் செய்கிறார்கள், யார் உண்மையாக நடந்து கொண்டார்கள் என்பதை ஜெயலலிதா உணர்ந்து அதற்கேற்ப மாற்றங்களை நிகழ்த்துவதாகவே தொண்டர்கள் நினைக்கின்றனர்.

tamil.oneindia.com

TAGS: