ஒதுக்கப்பட்ட சசிகலா குடும்பம்! தமிழக மக்களின் மனநிலை என்ன?

vk-sasikalaசசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 70 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா போலவே நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றினார் சசிகலா.

ஜெயலலிதாவைப் போலவே அய்யங்கார் நாமம், சிகை அலங்காரம், காலர் வச்ச ஜாக்கெட் என இத்தனை நாள் இதற்காக தான் காத்திருந்தது போல் உடனடியாக இன்னொரு ஜெ.,வாக மாறினார் சசிகலா.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே யாரையும் பார்க்க விடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சசிகலா.

மத்திய அமைச்சர்கள், ஆளுநர் என யாரையும் ஜெயலலிதாவை சந்திக்க விடவில்லை சசிகலா.

வீட்டில் நடந்த மோதலில் சசிகலா ஜெயலலிதாவை தாக்கினார். அதனாலேயே உடல்நலக்குறைவு எற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்ததாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் நாற்காலியில் அமர முயன்ற சசிகலா, ஜெயலலிதாவுக்கே தான்தான் அரசியலை ஊட்டியதாக கூறினார்.

சசிகலாவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் குடும்பத்தினரின் கரங்களுக்கு சென்றதை விரும்பாத அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத குடும்பத்தினர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட குடும்பத்தினர் கட்சியிலிருந்து விரட்டப்பட்டிருப்பது அதிமுக அடிமட்ட தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு! அதிமுக அம்மா அணி திடீர் அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார்.

ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார்.

இது சட்டமன்ற , நாடாளுமன்ற, அதிமுக நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம் என்றார். டிடிவி தினகரனின் குடும்பத்தினர் எந்த ஒரு தலையீடும் இல்லாமல் இருக்கும்.

இந்த முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இன்று அறிவிக்கிறோம். அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இணைந்து முடிவு எடுத்துள்ளோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

கட்சி வழிநடத்துவதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார்.

 -tamilwin.com
TAGS: