சட்டைய கிழிச்சிக்கிட்டு பைத்தியம் போல சுற்றும் விவசாயிகள்.. மனம் இறங்காத மத்திய அரசு

farmers-protest4566டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

மோடி போல் வேடம்

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி போன்று வேடமணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாயி மயங்கி விழுந்தார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனநலம் பாதிப்பு

இதனைத் தொடர்ந்து இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். தங்களது சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று விவசாயிகள் போராட்டத்தை நடத்தினார்கள்.

வேடிக்கை

கண்டதையும் தின்று கொண்டு பார்ப்பதற்கு பைத்தியம் போன்று வேடமிட்டு விவசாயிகள் சாலையில் ஓடியது பார்ப்பதற்கு கொடுமையாக இருந்தது. இதனை வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் உச்சு கொட்டிவிட்டு சென்றனர்.

அலட்சிய போக்கு

ஆனாலும், மத்திய அரசிற்கு விவசாயிகள் மீது எந்தவிதமான இறக்கமும் இல்லாமல் அலட்சிய போக்குடனேயே நடந்து வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடும் துணிவுடன் உள்ளோம் என்று அய்யாகண்ணு கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: