பிரித்தானியா தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம் தற்போது, பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வைரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது,வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி கோர்ட்டால் உத்தரவிட முடியாது.
இவ்வாறு பல்வேறு நாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிந்தும், இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோஹினுார் வைரத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-lankasri.com