சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வழி வகை செய்யப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.
வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் தற்போது 41-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையி்ல அனைத்து முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.
அதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நதிகள் இணைப்பிற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும். வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் ரத்து தொடர்பாகவும் பிரதமர் மோடியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுப்பேன்.
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு! யாருடா அந்த பிந்திய அரசாங்கம்? உலகையே ஆண்ட தமிழன் ஏன் அவனுக்கு அடிமையா இருக்க வேண்டும்???