கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.. ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு- மத்திய அமைச்சர்

keezhadi-28-1493374362

மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார்.

அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: